search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரப்ப மொய்லி"

    கர்நாடக மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க ஜேடிஎஸ் கட்சியுடன் இணைந்தது தான் காங்கிரசின் சமீபத்திய தோல்விக்கு முக்கிய காரணம் என வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
    பெங்களூரு:

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று பல்வேறு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். தோல்விக்கான காரணம் குறித்து கட்சி தலைமை ஆராய்ந்து வருகிறது. தோல்வி குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை கூறி வருகின்றனர்.

    இந்நிலையில், முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி கூறியதாவது:-


    கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததுதான், பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்ததற்கு முக்கிய காரணம். 

    பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, இத்தகைய தோல்வியை காங்கிரஸ் சந்தித்தது இல்லை. இந்த கூட்டணிக்கு மக்களிடையே வரவேற்பு இல்லை. இரண்டு கட்சிகளுக்கும் பாடம் புகட்ட வாக்காளர்கள் விரும்பியிருக்கிறார்கள். அதற்கு இந்த தேர்தல் முடிவுகள்தான் சான்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்றத் தேர்தலில் சிக்கபல்லபூர் தொகுதியில் போட்டியிட்ட மொய்லி, பாஜக வேட்பாளர் பச்சேகவுடாவிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 இடங்களில் வெற்றி பெறும் என்று வீரப்ப மொய்லி கூறியுள்ளார். #veerappamoily #rahulgandhi #bjp #congress
    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,  2019 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 இடங்களில் வெற்றி பெறும். 

    எதிர்க்கட்சிகளில் நாங்கள் முன்னிலை வகிப்போம். மாநில வாரியாக பாராளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து பகுப்பாய்வு செய்து பாருங்கள். பாரதீய ஜனதா கூட்டணி அரசு வீழ்ந்து விடும் என்ற முடிவுக்கு நிச்சயம் நீங்கள் வருவீர்கள் எனக் கூறியுள்ளார்.

    பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி களம் இறக்குமா? என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத்தில் பெரிய கட்சி, குறிப்பாக எதிர்க்கட்சிகளில் பெரிய கட்சி. நிச்சயமாக எதிர்க்கட்சி முன்னணிக்கு நாங்கள் தலைமை வகிப்போம். அதற்கான வாய்ப்பு சாதகமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் பிற எதிர்க்கட்சிகள் தங்களுடன் கூட்டணிக்கு வரும் எனவும் நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.  #veerappamoily #rahulgandhi #bjp #congress

    ×